நூல்கள்›நற்றிணை›பாடல் 1656

பாடல் 1656

மதுரை மருதன் இளநாகனார்

கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,

செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்

மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,

துய்த் தலை மந்தி தும்மும் நாட!

நினக்கும் உரைத்தல் நாணுவல் - இவட்கே . . . .

நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்

பசலை ஊரும் அன்னோ; பல் நாள்

அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,

வண்டு எனும் உணராவாகி,

மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே . . . .

குறிஞ்சி

← பாடல் 1655பாடல் 1657 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்