பாடல் 1655
மதுரைக் காருலவியங் கூத்தனார்
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் . . . .
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று - இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ? - பெரும! - தவிர்க நும் செலவே.
பாலை