நூல்கள்›நற்றிணை›பாடல் 1647

பாடல் 1647

மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த

பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,

தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,

பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்

உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை . . . .

அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து

என் ஆகுவகொல்தானே - எந்தை

ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி,

ஆயமொடு குற்ற குவளை

மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? . . . .

குறிஞ்சி

← பாடல் 1646பாடல் 1648 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்