நூல்கள்›நற்றிணை›பாடல் 1640

பாடல் 1640

பரணர்

விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,

களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,

உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்

வாளை பிறழும் ஊரற்கு, நாளை

மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! . . . .

தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி

உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன்

சொல்லலைகொல்லோ நீயே - வல்லை,

களிறு பெறு வல்சிப் பாணன் கையதை

வள் உயிர்த் தண்ணுமை போல . . . .

உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே?

மருதம்

← பாடல் 1639பாடல் 1641 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்