நூல்கள்›நற்றிணை›பாடல் 1639

பாடல் 1639

கபிலர்

நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,

தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,

'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின்

ஆழல்; வாழி! - தோழி! - 'வாழைக்

கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும் . . . .

பெரு மலை நாடன் கேண்மை நமக்கே

விழுமமாக அறியுநர் இன்று' என,

கூறுவைமன்னோ, நீயே;

தேறுவன்மன் யான், அவருடை நட்பே.

குறிஞ்சி

← பாடல் 1638பாடல் 1640 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்