நூல்கள்›நற்றிணை›பாடல் 1637

பாடல் 1637

அம்மூவனார்

கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;

பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;

கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த

திதலை அல்குல் நலம் பாராட்டிய

வருமே - தோழி! - வார் மணற் சேர்ப்பன் . . . .

இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை

மா அரை மறைகம் வம்மதி - பானாள்,

பூ விரி கானல், புணர் குறி வந்து, நம்

மெல் இணர் நறும் பொழில் காணா

அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே . . . .

நெய்தல்

← பாடல் 1636பாடல் 1638 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்