பாடல் 1636
உரோடோகத்துக் கந்தரத்தனார்
தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ
'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் . . . .
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ - தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் . . . .
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?
குறிஞ்சி