நூல்கள்›நற்றிணை›பாடல் 1632

பாடல் 1632

மதுரை மருதன் இளநாகனார்

இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த

நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்

காடு கவின் பூத்தஆயினும், நன்றும்

வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்

நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ . . . .

தாஅம் தேரலர்கொல்லோ - சேய் நாட்டு,

களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு

வெளிறு இல் காழ வேலம் நீடிய

பழங்கண் முது நெறி மறைக்கும்,

வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? . . . .

பாலை

← பாடல் 1631பாடல் 1633 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்