நூல்கள்›நற்றிணை›பாடல் 1631

பாடல் 1631

பாண்டியன் மாறன் வழுதி

'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி

நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை

மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,

மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்

கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள் . . . .

பாவை அன்ன வனப்பினள் இவள்' என,

காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,

யாய் மறப்பு அறியா மடந்தை

தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.

குறிஞ்சி

← பாடல் 1630பாடல் 1632 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்