நூல்கள்›நற்றிணை›பாடல் 1630

பாடல் 1630

பரணர்

சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்

மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,

உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்

தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்

சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் . . . .

முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!

நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது,

நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்

இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண்

ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண், . . . .

பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம்

அட்டில் ஓலை தொட்டனை நின்மே.

மருதம்

← பாடல் 1629பாடல் 1631 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்