நூல்கள்›நற்றிணை›பாடல் 1629

பாடல் 1629

வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

உரு கெழு யானை உடை கோடு அன்ன,

ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,

தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது

வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்

காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண் . . . .

நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ

வில் எறி பஞ்சி போல, மல்கு திரை

வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்

நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

நெய்தல்

← பாடல் 1628பாடல் 1630 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்