நூல்கள்›நற்றிணை›பாடல் 1627

பாடல் 1627

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,

நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்;

பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ,

மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;

'எவன்கொல்?' என்று நினைக்கலும் நினைத்திலை; . . . .

நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே;

சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்

முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்

மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை

மையல் உறுகுவள், அன்னை; . . . .

ஐயம் இன்றிக் கடுங் கவவினளே.

குறிஞ்சி

← பாடல் 1626பாடல் 1628 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்