நூல்கள்›நற்றிணை›பாடல் 1626

பாடல் 1626

குதிரைத் தறியனார்

என் ஆவதுகொல்? தோழி!- மன்னர்

வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த

பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப,

புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்

ஏ கல் மீமிசை மேதக மலரும், . . . .

பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,

வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்

செல்ப என்ப, காதலர்:

ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே.

பாலை

← பாடல் 1625பாடல் 1627 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்