நூல்கள்›நற்றிணை›பாடல் 1624

பாடல் 1624

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,

நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ;

மாயம் அன்று - தோழி! - வேய் பயின்று,

எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும்,

தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் . . . .

கொன்ற யானைக் கோடு கண்டன்ன,

செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்

சிலம்புடன் கமழும் சாரல்

இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே!

குறிஞ்சி

← பாடல் 1623பாடல் 1625 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்