நூல்கள்›நற்றிணை›பாடல் 1623

பாடல் 1623

கயமனார்

மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,

பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்

இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,

விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்

பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், . . . .

பெரு விதுப்புறுகமாதோ - எம் இற்

பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ,

கொண்டு உடன் போக வலித்த

வன்கண் காளையை ஈன்ற தாயே.

பாலை

← பாடல் 1622பாடல் 1624 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்