நூல்கள்›நற்றிணை›பாடல் 1622

பாடல் 1622

நல்வேட்டனார்

நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த

பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்

தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,

யாணர் வைப்பின், கானம் என்னாய்;

களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை . . . .

ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்

கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்

கராஅம் பேணாய்; இரவரின்,

வாழேன் - ஐய! - மை கூர் பனியே!

குறிஞ்சி

← பாடல் 1621பாடல் 1623 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்