நூல்கள்›நற்றிணை›பாடல் 1621

பாடல் 1621

கபிலர்

நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்

நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு

குப்பை வெண் மணல் ஏறி, அரைசர்

ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,

தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும், . . . .

கண்டாங்கு உரையாய்; கொண்மோ - பாண!

மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து,

எல்லித் தரீஇய இன நிரைப்

பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே?

நெய்தல்

← பாடல் 1620பாடல் 1622 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்