பாடல் 1620
மதுரை மருதன் இளநாகனார்
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! . . . .
நீயே பெரு நலத்தையே; அவனே,
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே.
மருதம்