நூல்கள்›நற்றிணை›பாடல் 1618

பாடல் 1618

குளம்பனார்

அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு

ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்

பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்

குன்ற நாடன் பிரிவின் சென்று,

நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை . . . .

செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ,

கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில்

ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்

சிறு கிளி கடிகம் சென்றும், 'இந்

நெடு வேள் அணங்கிற்று' என்னும்கொல் அதுவே? . . . .

குறிஞ்சி

← பாடல் 1617பாடல் 1619 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்