நூல்கள்›நற்றிணை›பாடல் 1617

பாடல் 1617

உலோச்சனார்

'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,

பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த;

நல் எயிலுடையோர் உடையம்' என்னும்

பெருந் தகை மறவன் போல - கொடுங் கழிப்

பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன், . . . .

நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,

காமம் பெருமையின், வந்த ஞான்றை

அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்

நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,

'தேர் மணித் தௌ இசைகொல்?' என, . . . .

ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.

நெய்தல்

← பாடல் 1616பாடல் 1618 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்