பாடல் 1616
துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்
'ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்' என,
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து . . . .
இனைதல் ஆன்றிசின் - ஆயிழை! - நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ - தோழி! - அவர் சென்ற திறமே?
பாலை