பாடல் 1615
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும் - உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, . . . .
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி - தோழி! - என்றும்,
அயலோர் அம்பலின் அகலான், . . . .
பகலின் வரூஉம், எறி புனத்தானே.
குறிஞ்சி