நூல்கள்›நற்றிணை›பாடல் 1614

பாடல் 1614

தேய்புரிப் பழங்கயிற்றினார்

'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்

நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,

உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம்,

'செல்லல் தீர்கம்; செல்வாம்' என்னும்:

'செய்வினை முடியாது எவ்வம் செய்தல் . . . .

எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என,

உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,

'சிறிது நனி விரையல்' என்னும்: ஆயிடை,

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய

தேய்புரிப் பழங் கயிறு போல, . . . .

வீவதுகொல் என் வருந்திய உடம்பே?

பாலை

← பாடல் 1613பாடல் 1615 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்