பாடல் 1613
மதுரை மருதன் இளநாகனார்
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,
இன்னை ஆகுதல் தகுமோ - ஓங்கு திரை . . . .
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்,
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?
நெய்தல்