நூல்கள்›நற்றிணை›பாடல் 1605

பாடல் 1605

அம்மூவனார்

செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்

காணார் முதலொடு போந்தென, பூவே

படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்

தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,

தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் . . . .

பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு

யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து,

அறனிலாளன் புகழ, எற்

பெறினும், வல்லேன்மன் - தோழி! - யானே.

நெய்தல்

← பாடல் 1604பாடல் 1606 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்