பாடல் 1604
காவன் முல்லைப் பூதனார்
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம், . . . .
'எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?' எனக்
கூறின்றும் உடையரோ மற்றே - வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை,
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே?
பாலை