நூல்கள்›நற்றிணை›பாடல் 1603

பாடல் 1603

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

இஃது எவன்கொல்லோ - தோழி! - மெய் பரந்து

எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்

வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்

அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என,

வேலன் உரைக்கும் என்ப: ஆகலின், . . . .

வண்ணம் மிகுந்த அண்ணல் யானை

நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்

கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்

குன்ற நாடனை உள்ளுதொறும்,

நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே? . . . .

குறிஞ்சி

← பாடல் 1602பாடல் 1604 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்