நூல்கள்›நற்றிணை›பாடல் 1602

பாடல் 1602

முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,

படிவ மகளிர் கொடி கொய்து அழித்த

பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,

கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,

இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் . . . .

பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்

நல்காமையின், நசை பழுதாக,

பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய்

அம்பல் மூதூர் அலர்ந்து,

நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே. . . . .

நெய்தல்

← பாடல் 1601பாடல் 1603 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்