நூல்கள்›நற்றிணை›பாடல் 1601

பாடல் 1601

ஆசிரியர் அறியப்படவில்லை

இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி

பைந் தாது எருவின் வைகு துயில் மடியும்

செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய,

செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச்

சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் . . . .

வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று,

வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த

குவளை உண்கண் என் மகள் ஓரன்ன,

செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்,

மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, . . . .

மா இருந் தாழி கவிப்ப,

தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே.

பாலை

← பாடல் 1600பாடல் 1602 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்