பாடல் 1596
கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே;
அதுவே சாலும் காமம்; அன்றியும், . . . .
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று
கூறுவல் - வாழியர், ஐய! - வேறுபட்டு
இரீஇய காலை இரியின்,
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே?
முல்லை