நூல்கள்›நற்றிணை›பாடல் 1586

பாடல் 1586

பாலை பாடிய பெருங்கடுங்கோ

நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,

அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை;

காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,

புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே;

இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் . . . .

களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ,

கார் பெயல் செய்த காமர் காலை,

மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை

காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த

கண் கவர் வரி நிழல் வதியும் . . . .

தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே.

பாலை

← பாடல் 1585பாடல் 1587 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்