நூல்கள்›நற்றிணை›பாடல் 1585

பாடல் 1585

ஆலம்பேரி சாத்தனார்

கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;

உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,

கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;

வயக் களிறு பொருத வாள் வரி உழுவை

கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ! . . . .

மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்

வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல

உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்

பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்,

திருமணி அரவுத் தேர்ந்து உழல, . . . .

உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே!

குறிஞ்சி

← பாடல் 1584பாடல் 1586 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்