நூல்கள்›நற்றிணை›பாடல் 1583

பாடல் 1583

கபிலர்

புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,

பள்ளி யானையின் வெய்ய உயிரினை,

கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து

எனவ கேளாய், நினையினை, நீ நனி:

உள்ளினும் பனிக்கும் - ஒள் இழைக் குறுமகள், . . . .

பேர் இசை உருமொடு மாரி முற்றிய,

பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி,

பலவு உறு குன்றம் போல,

பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே.

குறிஞ்சி

← பாடல் 1582பாடல் 1584 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்