பாடல் 1576
காப்பியஞ் சேந்தனார்
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, . . . .
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,
வருவர் வாழி - தோழி! - புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
'வருதும்' என்ற பருவமோ இதுவே? . . . .
பாலை