நூல்கள்›நற்றிணை›பாடல் 1575

பாடல் 1575

அல்லங்கீரனார்

நகையாகின்றே - தோழி! - 'தகைய

அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை

மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,

துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,

ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், . . . .

தௌ தீம் கிளவி! யாரையோ, என்

அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என,

பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,

தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்

தான் அணங்குற்றமை கூறி, கானல் . . . .

சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,

பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

நெய்தல்

← பாடல் 1574பாடல் 1576 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்