பாடல் 1574
கூற்றங்குமரனார்
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ . . . .
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்
தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ
செய்யாய்: ஆதலின் கொடியை - தோழி!
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என் . . . .
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.
குறிஞ்சி