நூல்கள்›நற்றிணை›பாடல் 1572

பாடல் 1572

விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,

புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,

பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்

பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,

கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து . . . .

செல்க - பாக! - நின் தேரே: உவக்காண்

கழிப் பெயர் களரில் போகிய மட மான்

விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,

காமர் நெஞ்சமொடு அகலா,

தேடூஉ நின்ற இரலை ஏறே. . . . .

முல்லை

← பாடல் 1571பாடல் 1573 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்