நூல்கள்›நற்றிணை›பாடல் 1571

பாடல் 1571

மதுரைப் பெருமருதனார்

உள்ளார்கொல்லோ - தோழி! - கொடுஞ் சிறைப்

புள் அடி பொறித்த வரியுடைத் தலைய

நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,

வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,

வேழ வெண் பூ விரிவன பலவுடன், . . . .

வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,

மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு

விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,

எல்லை போகிய பொழுதின் எல் உற,

பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, . . . .

பல் இதழ் உண்கண் கலுழ,

நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?

பாலை

← பாடல் 1570பாடல் 1572 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்