நூல்கள்›நற்றிணை›பாடல் 1570

பாடல் 1570

நப்பாலத்தனார்

ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே

வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்

கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,

ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்

துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், . . . .

வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,

கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,

ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்

யானை இன நிரை வெளவும்

கானம் திண்ணிய மலை போன்றிசினே. . . . .

பாலை

← பாடல் 1569பாடல் 1571 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்