நூல்கள்›நற்றிணை›பாடல் 1569

பாடல் 1569

குன்றியனார்

ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,

மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்

இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,

அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்

காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், . . . .

ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்

புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்

மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு

அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை

வார் கோல் எல் வளை உடைய வாங்கி, . . . .

முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர்

எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?

நெய்தல்

← பாடல் 1568பாடல் 1570 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்