நூல்கள்›நற்றிணை›பாடல் 1567

பாடல் 1567

காரிக்கண்ணனார்

நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,

பனி மலி கண்ணும் பண்டு போலா;

இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்

நீத்து நீடினர் என்னும் புலவி

உட்கொண்டு ஊடின்றும் இலையோ? - மடந்தை! . . . .

உவக்காண் தோன்றுவ, ஓங்கி - வியப்புடை

இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்

புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,

உலகம் உவப்ப, ஓது அரும்

வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! . . . .

பாலை

← பாடல் 1566பாடல் 1568 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்