நூல்கள்›நற்றிணை›பாடல் 1566

பாடல் 1566

நம்பி குட்டுவன்

நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்

தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே

ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென

முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என,

நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு . . . .

உரை, இனி - வாழி, தோழி! - புரை இல்

நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து

அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென

வியல் அறை மூழ்கிய வளி என்

பயலை ஆகம் தீண்டிய, சிறிதே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1565பாடல் 1567 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்