நூல்கள்›நற்றிணை›பாடல் 1565

பாடல் 1565

ஆசிரியர் அறியப்படவில்லை

உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,

அரவு வாள் வாய முள் இலைத் தாழை

பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்

பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்

மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், . . . .

குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,

கண்டனம் வருகம் சென்மோ - தோழி!

தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,

படு மணிக் கலி மாக் கடைஇ,

நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. . . . .

நெய்தல்

← பாடல் 1564பாடல் 1566 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்