பாடல் 1564
ஆசிரியர் அறியப்படவில்லை
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே அஃது ஆன்று
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு . . . .
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.
குறிஞ்சி