நூல்கள்›நற்றிணை›பாடல் 1563

பாடல் 1563

அஞ்சில் ஆந்தையார்

கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று

மட மா மந்தி மாணா வன் பறழ்,

கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்

பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,

இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று . . . .

கூறுவென் வாழி - தோழி! - முன்னுற

நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,

ஆன்றோர் செல் நெறி வழாஅச்

சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தௌமே.

குறிஞ்சி

← பாடல் 1562பாடல் 1564 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்