நூல்கள்›நற்றிணை›பாடல் 1562

பாடல் 1562

முதுவெங்கண்ணனார்

சிறு கண் யானைப் பெருங் கை ஈர் - இனம்

குளவித் தண் கயம் குழையத் தீண்டி,

சோலை வாழை முணைஇ, அயலது

வேரல் வேலிச் சிறுகுடி அலற,

செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் . . . .

மா மலை நாட! - காமம் நல்கென

வேண்டுதும் - வாழிய! எந்தை, வேங்கை

வீ உக வரிந்த முன்றில்,

கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.

குறிஞ்சி

← பாடல் 1561பாடல் 1563 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்