நூல்கள்›நற்றிணை›பாடல் 1561

பாடல் 1561

இளநாகனார்

மை அற விளங்கிய மணி நிற விசும்பில்

கைதொழும் மரபின் எழு மீன் போல,

பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,

சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்

துறை புலம்பு உடைத்தே - தோழி! - பண்டும், . . . .

உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,

பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்

கானல்அம் கொண்கன் தந்த

காதல் நம்மொடு நீங்காமாறே.

நெய்தல்

← பாடல் 1560பாடல் 1562 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்