பாடல் 1559
ஆசிரியர் அறியப்படவில்லை
'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து,
'சென்மின்' என்றல் யான் அஞ்சுவலே;
'செல்லாதீம்' எனச் செப்பின், பல்லோர்
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே;
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு, . . . .
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,
உழையீராகவும் பனிப்போள் தமியே
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,
ஆடிய இள மழைப் பின்றை, . . . .
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?
பாலை