நூல்கள்›நற்றிணை›பாடல் 1557

பாடல் 1557

தேவனார்

அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த

இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;

புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த

பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!

படு மணி யானைப் பசும்பூட் சோழர் . . . .

கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,

கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்

தேர் வழங்கு தெருவின் அன்ன,

கௌவை ஆகின்றது - ஐய! - நின் அருளே.

நெய்தல்

← பாடல் 1556பாடல் 1558 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்