பாடல் 1554
பாலை பாடிய பெருங்கடுங்கோ
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
'பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
'புணர்ந்தீர் புணர்மினோ' என்ன, இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் . . . .
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்
'பிரியலம்' என்று, தௌத்தோர் தேஎத்து,
இனி எவன் மொழிகோ, யானே - கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய . . . .
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?
பாலை